ஐ.பி.எல்.2026: மார்ச் 26-ம் தேதி தொடக்கம்..?

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது.;

Update:2025-12-16 19:50 IST

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 18 சீசன்களை வெற்றிகரமாக கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் டி20 கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் கடந்த 2008-ம் ஆண்டு இந்த தொடங்கப்பட்ட இந்த தொடர் உலகளாவிய லீக் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதன் 18-வது சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதனையடுத்து இந்த தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 19வது ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 31ம் தேதி முடியும் என 10 ஐபிஎல் அணிகளிடம் பிசிசிஐ தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறுமா? என்பது குறித்து இன்னும் முடிவு எட்டப்படாததால் தொடக்க லீக் போட்டி குறித்து முடிவு செய்யவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்