ஐ.பி.எல்.: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
காயம் காரணமாக பாப் டு பிளெஸ்சிஸ் டெல்லி அணியில் இடம்பெறவில்லை.;
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகின்ற 29-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மும்பை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
டெல்லி அணியில் காயம் காரனமாக துணை கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் இடம்பெறவில்லை. மும்பை அணியில் மாற்றமில்லை.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
டெல்லி கேப்பிடல்ஸ்: ஜேக் பிரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கே.எல். ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோகித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.