ஐ.பி.எல்.இறுதிப்போட்டி 2025: மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா..?

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.;

Update:2025-06-02 20:31 IST

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நடைபெறும் சமயத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அகமதாபாத் வானிலைத்துறை கணித்துள்ளது. லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.

முன்னதாக நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான தகுதி சுற்று 2 ஆட்டம் மழை காரணமாக 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்