ஆஷஸ் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 211/3

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.;

Update:2026-01-04 14:48 IST

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியாவும், 4-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராவ்லி, பென் டக்கட் களமிறங்கினர். கிராவ்லி 16 ரன்னிலும், டக்கட் 27 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஜாக்கப் பெத்தல் 10 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஜோ ரூட் , ஹாரி புரூக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாசினர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் ஜோ ரூட் 72 ரன்னிலும், புரூக் 78 ரன்னிலும் களத்தில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்