ஐ.பி.எல்.: முதல் பேட்ஸ்மேனாக வரலாற்று சாதனை படைத்த நிக்கோலஸ் பூரன்

ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.;

Update:2025-03-28 14:05 IST

image courtesy:twitter/@IPL

ஐதராபாத்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார்.

இந்த ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனையும் சேர்த்து ஐ.பி.எல். தொடரில் இதுவரை 4 முறை 20க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 4 முறை 20க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. நிக்கோலஸ் பூரன் - 4 முறை

2. டிராவிஸ் ஹெட்/ஜேக் பிரெசர் - மெக்குர்க் - 3 முறை


Tags:    

மேலும் செய்திகள்