ஜான்டி ரோட்ஸ், கிளென் பிலிப்ஸ் இல்லை.. அந்த இந்திய வீரர்தான் உலகின் சிறந்த பீல்டர் - நெஹ்ரா

ஆஷிஸ் நெஹ்ரா தற்போது குஜராத் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.;

Update:2025-04-20 20:48 IST

அகமதாபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ரா தற்போது ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

இவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிரிக்கெட் உலகின் சிறந்த பீல்டர் யார்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஆஷிஸ் நெஹ்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜாதான் சிறந்த பீல்டர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் நிறைய சிறந்த பீல்டர்களை பார்த்திருக்கிறேன். சிலர் உள்வட்டத்திலும், சிலர் வெளிப்புறத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். அந்தவகையில் ஜான்டி ரோட்ஸ் உள்வட்டத்திற்குள் சிறந்தவர். ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் ஏபி டிவில்லியர்சும் சிறந்த பீல்டர்தான். ஆனால் இவர்களுடன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் ஜடேஜா போட்டிக்கு வருவர்.

இவர்களில் நான் ஜடேஜாவை உலகின் சிறந்த பீல்டராக தேர்வு செய்வேன். அது அவரது வயது காரணமாக அல்ல. அவர் 2008-09-ல் அறிமுகமானபோது, எப்படி பீல்டிங் செய்தாரோ இப்பவும் அப்படியே செய்கிறார். இதற்கு காரணம் அவரது உடற்தகுதி. அவர் என்ன சாப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் வித்தியாசமாக ஏதாவது சாப்பிடுகிறார் என்றால் எங்களிடம் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்