லக்னோ அணியின் ஆலோசகராகும் கேன் வில்லியம்சன்

2026 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-10-16 13:13 IST

புதுடெல்லி ,

19வது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 13-ம் தேதியிலிருந்து 15-ம் தேதிக்குள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக நியூசிலாந்து அணி முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சீசனில் லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இதனால் அந்த அணியின் ஆலோசகராக செயல்பட்ட ஜாகீர் கான் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்