கிரிக்கெட்டுக்காக உடல் எடையை குறைத்த சர்பராஸ் கான் - கெவின் பீட்டர்சன் பாராட்டு

சர்பராஸ் கான் பிட்டாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.;

Update:2025-07-22 09:24 IST

லண்டன்,

இந்திய கிரிக்கெட் வீரரான சர்பராஸ் கான் உள்ளூர் தொடர்களில் அசத்தியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்து அசத்தினார். அத்துடன் கடந்த நியூசிலாந்து தொடரில் சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். இருப்பினும் அப்படிப்பட்ட அவரை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் கழற்றி விட்டது.

ஆனால் இதனை நினைத்தெல்லாம் கவலைப்படாத அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். முன்னதாக அவரை இந்திய அணியில் எடுக்க அவரது பிட்னஸ் பெரிய தடையாக இருந்தது. சர்பராஸ் கொஞ்சம் அதிக உடல் எடை கொண்டவராக இருந்தார்.

இதனால் கிடைக்கும் நேரத்தில் தனது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்திய அவர், கடின உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொண்டார். அவரது முயற்சியின் வெற்றியாக தற்போது பிட்டாக இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், சர்பராஸ் கானை பாராட்டியுள்ளார். இது குறித்து பீட்டர்சன் தனது எக்ஸ் பக்கத்தில், "மிகச்சிறந்த முயற்சி, இளைஞனே! மிகப்பெரிய பாராட்டுகள், இது களத்தில் சிறந்த மற்றும் நிலையான செயல்திறனைப் பெற வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் முன்னுரிமைகளை மறுசீரமைக்க நீங்கள் செலவிட்ட நேரத்தை நான் விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்