கொல்கத்தா டெஸ்ட்; சுப்மன் கில் விலகல்

கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-11-16 10:21 IST

கொல்கத்தா,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறக்கிய இந்தியா 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது.

இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, முதல் இன்னிங்சில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.அவருக்கு கழுத்து பகுதியில் லேசான வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் களத்தில் இருந்து வெளியேறினார். சுப்மன் கில் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழுத்து வலியால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் இனி விளையாடமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது . அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்கானிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் விலகியுள்ளதால் ரிஷப் பண்ட் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.  

Tags:    

மேலும் செய்திகள்