லெஜண்ட்ஸ் லீக்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பின்னி 50 ரன் எடுத்தார்.;

Update:2025-07-30 07:00 IST

கோப்புப்படம்

லீட்ஸ்,

2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிய இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பொல்லார்டு 74 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 148 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பின்னி 50 ரன் எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்