அதிக கேட்ச்: டிராவிட்டை பின்னுக்கு தள்ளிய ஸ்மித்
மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 2 கேட்ச் பிடித்தார்;
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.தொடர்ந்து 42 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களில் 132 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை நோக்கிபேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாகநடப்பு தொடரில் முதல் வெற்றியை இங்கிலாந்து அணி பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 3-1 என்ற நிலையில் உள்ளது.இந்த நிலையில், மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 2 கேட்ச் பிடித்தார் . இதன் மூலம் டெஸ்டில் அவரது கேட்ச் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்தது.
ஸ்டீவன் ஸ்மித்டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த இந்தியாவின் ராகுல் டிராவிட்டை (210 கேட்ச்)பின்னுக்கு தள்ளினார். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (214) உள்ளார்.