முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: ஆயுஷ் மாத்ரே சதம் ...மும்பை அணி வெற்றி

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் லீக்’ சுற்றுக்கு முன்னேறும்.;

Update:2025-11-29 10:06 IST

ஆமதாபாத்,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் லீக்’ சுற்றுக்கு முன்னேறும்.

இதில் லக்னோவில் நடந்த ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பாவை பந்தாடி 2-வது வெற்றியை தனதாக்கியது. விதர்பா நிர்ணயித்த 193 ரன் இலக்கை 17.5 ஓவர்களில் மும்பை எட்டிப்பிடித்தது. 20 ஓவர் போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்த 18 வயதான ஆயுஷ் மாத்ரே 110 ரன்களுடனும் (53 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), ஷிவம் துபே 39 ரன்களுடனும் (19 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக சூர்யகுமார் யாதவ் 35 ரன்களில் கேட்ச் ஆனார். அஜிங்யா ரஹானே டக்-அவுட் ஆனார்.

Tags:    

மேலும் செய்திகள்