அடுத்த மாதம் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியா வருகை

இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.;

Update:2025-11-29 08:53 IST

புதுடெல்லி,

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

இதன்படி இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது (டிச.21), 2-வது போட்டி (டிச.23) விசாகப்பட்டினத்திலும், 3-வது (டிச.26), 4-வது (டிச.28), 5-வது மற்றும் கடைசி போட்டி (டிச.30) திருவனந்தபுரத்திலும் நடக்கிறது. 2016-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை பெண்கள் அணி 20 ஓவர் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய பெண்கள் அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். ஏற்கனவே இந்த சமயத்தில் நடக்க இருந்த வங்காளதேச பெண்கள் அணியின் பயணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டதால், அதற்கு மாற்றாக இலங்கைக்கு எதிரான தொடர் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்