கடைசி டி20 போட்டி: நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
2-1 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.;
வெல்லிங்டன்,
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் ஒரு போட்டி மழையால் தடைபட்ட நிலையில் 2-1 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. டுனிதின் யூனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்ற நியூசிலாந்து முனைப்பு காட்டும் என்பதால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.