தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு
முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
கொல்கத்தா,
இந்தியாவுக்கு வந்துள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் , தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடும் லெவனில் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதமடித்து துருவ் ஜுரேல் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அவர்
நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக துருவ் ஜுரேல் விளையாட உள்ளார் என கூறப்படுகிறது.