ஒருநாள் கிரிக்கெட்: டி வில்லியர்ஸ் தேர்வு செய்த 5 சிறந்த பேட்ஸ்மேன்கள்.. 3 இந்திய வீரர்களுக்கு இடம்

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 5 சிறந்த பேட்ஸ்மேன்களை ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்துள்ளார்.;

Update:2025-03-07 12:13 IST

image courtesy: PTI

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவரது அதிரடி ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு உண்டு. ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் 360' என்றழைப்பர். அந்த அளவுக்கு மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்சர் அடிக்கும் திறமை படைத்தவர். விளையாடிய கால கட்டங்களில் ஏராளமான சாதனைகள் படைத்த இவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

இதனையடுத்து ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அதிலும் கடந்த 2021-ம் ஆண்டோடு விடை பெற்றார். அதன் பின் எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவ்வப்போது வீரர்கள் மற்றும் அணிகள் குறித்து கருத்துகள் சொல்லி வருகிறார்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்து விளங்கிய 5 பேட்ஸ்மேன்களை அவர் தேர்வு செய்துள்ளார். அதில் 3 இந்திய வீரர்கள், தலா ஒரு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா வீரர் இடம்பெற்றுள்ளனர்.

ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்த 5 சிறந்த பேட்ஸ்மேன்கள்:-

*மகேந்திரசிங் தோனி

*விராட் கோலி

* சச்சின்

*ரிக்கி பாண்டிங்

*ஜாக் காலிஸ்

Tags:    

மேலும் செய்திகள்