ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் ஆக்கிய நியூசிலாந்து

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.;

Update:2025-11-22 15:53 IST

image courtesy:ICC

ஹாமில்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 36.2 ஓவர்களில் 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Advertising
Advertising

பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 30.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்க் சாப்மன் 64 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் ஆக்கியது. மேட் ஹென்றி ஆட்ட நாயகனாகவும், கைல் ஜேமிசன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்