மகளிர் பிரீமியர் லீக்: வீராங்கனைகள் ஏலம் எப்போது தெரியுமா..?

இறுதி ஏலப்பட்டியலில் மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.;

Update:2025-11-22 14:52 IST

image courtesy:twitter/@wplt20

புதுடெல்லி,

5 அணிகள் பங்கேற்கும் 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இறுதி ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் இருந்து 73 வீராங்கனைகள் ஏலத்தில் எடுக்கப்பட இருக்கிறார்கள். உலகக்கோப்பை போட்டியில் தொடர்நாயகி விருது பெற்ற ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, ஹர்லீன் தியோல், பிரதிகா ராவல், நியூசிலாந்தின் சோபி டிவைன், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் உள்ளிட்டோர் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertising
Advertising
Tags:    

மேலும் செய்திகள்