ரஞ்சி டிராபி: மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணி அறிவிப்பு

இந்த சீசனுக்கான (2025-26) ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 15-ந் தேதி தொடங்குகிறது.;

Update:2025-10-07 13:51 IST

கோப்புப்படம்

சென்னை,

இந்த சீசனுக்கான (2025-26) ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான கர்நாடகா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் கருன் நாயர், ஸ்ரேயாஸ் கோபா, வைஷாக் விஜயகுமார், அபினவ் மனோகர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சீனியர் வீரரான கே.எல்.ராகுலுக்கு அணியில் இடம்பெறவில்லை.

கர்நாடகா அணி விவரம்: மயங்க் அகர்வால் (கேப்டன்), கருண் நாயர், ஆர்.ஸ்மரன், கே.எல்.ஸ்ரீஜித் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் கோபால், வைஷாக் விஜயகுமார், வித்வத் கவேரப்பா, அபிலாஷ் ஷெட்டி, எம்.வெங்கடேஷ், நிகின் ஜோஸ், அபினவ் மனோகர், க்ருத்திக் கிருஷ்ணா (விக்கெட் கீப்பர்), கே.வி.அனீஷ், மோஷின் கான், ஷிகார் ஷெட்டி.

Tags:    

மேலும் செய்திகள்