ஒரே ஓவரில் 7 வைடுகளை வீசிய அர்ஷ்தீப்.. கம்பீர் கொடுத்த ரியாக்சன்.. வைரல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.;

Update:2025-12-12 05:30 IST

சண்டிகார்,

இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி காக் 90 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 214 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் திலக் வர்மா 62 ரன்கள் அடிக்க, தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பார்த்மேன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கின்போது 11-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் வீசினார். அந்த ஓவரில் மட்டும் எக்ஸ்டிரா வகையில் 7 வைடுகளை வாரி வழங்கினார். இதையும் சேர்த்து அந்த ஓவரில் மொத்தம் 13 பந்துகள் வீசினார்.

இதனால் இந்திய அணியின் கவுதம் கம்பீர் கடும் அதிருப்தி அடைந்தார். அத்துடன் அதிருப்தியில் ஏதோ கூறி கத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்