எஸ்.ஏ. டி20: டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணியின் கேப்டன் டான் லாரன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்;
டர்பன்,
4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டிவிட்ட இந்த போட்டியில் 2வது தகுதி சுற்றில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன,
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணியின் கேப்டன் டான் லாரன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
பார்ல் ராயல்ஸ்:
லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், கைல் வெர்ரைன், ரூபின் ஹெர்மன், டான் லாரன்ஸ், சிக்கந்தர் ராசா, ரோவ்மேன் பவல், ஆசா ட்ரைப், ஜார்ன் போர்டுயின், ஹார்டஸ் வில்ஜோன், ஒட்னீல் பார்ட்மேன், நகோபானி மொகோனா.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் :
குயின்டன் டி காக், ஜானி பேர்ஸ்டோவ், மேத்யூ பிரீட்ஸ்கே, ஜோர்டான் ஹெர்மன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், ஜேம்ஸ் கோல்ஸ், கிறிஸ் கிரீன், செனுரான் முத்துசாமி, அன்ரிச் நார்ட்ஜே, லூத்தோ சிபாம்லா.