ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது;
லாகூர்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி:
சல்மான் ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பகார் ஜமான், கவாஜா முகமது நபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சாஹிப்சாதா பர்ஹான், சயீம் அயூப் , உஸ்மான் கான், ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, உஸ்மான் தாரிக்.