டி20 உலகக் கோப்பை - நியூசிலாந்து அணியில் இருந்து ஆடம் மில்னே விலகல்...மாற்று வீரர் இவரா?
டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த ஆடம் மில்னே தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகி இருக்கிறார்.;
சென்னை,
தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இருந்து ஆடம் மில்னே விலகி இருக்கிறார்.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி துவங்கும் இந்த தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இதில் நியூசிலாந்து அணி, 'டி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் ஆப்ரிக்கா, கனடா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. முன்னதாக இத்தொடருக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவித்தது.
அதன்படி, மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஆலன், பிரேஸ்வெல், மார்க் சாப்மன், கான்வே, ஜேக்கப் டபி, பெர்குசன், மாட் ஹென்றி, டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, டிம் செய்பெர்ட், இஷ் சோதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த ஆடம் மில்னே தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகி இருக்கிறார். அவருக்கு மாற்றாக கைல் ஜெமிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.