யு19 உலகக் கோப்பை: சீட்டு கட்டுபோல் சரிந்த விக்கெட்டுகள்..இலங்கை 58 ரன்களில் ஆட்டமிழப்பு

இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.;

Update:2026-01-23 15:11 IST

ஜார்ஜியா,

16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி  வீரர்கள் , ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இலங்கை பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்.இதனால் 18.5 ஓவர்களில் இலங்கை அணி 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசி வில் பைரோம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 59 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்