சுப்மன் கில் தங்கியுள்ள அறையில் மட்டும் ரூ.3 லட்சத்துக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்.... என்ன காரணம் ?

போட்டியை விட மாசடைந்த குடிநீர் பிரச்சினை பேசுபொருளாகியுள்ளது.;

Update:2026-01-18 14:48 IST

இந்தூர்,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்தூரில் உள்ள சில பகுதிகளில் தண்ணீர் மாசுபட்டதால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போட்டியை விட மாசடைந்த குடிநீர் பிரச்சினை பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், மாசடைந்த குடிநீர் பிரச்சினையை தடுக்க போட்டி நடக்கும் இந்தூர் நகருக்கு இந்திய கேப்டன் சுப்மன் கில், தன்னுடன் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குடிநீரை தூய்மை செய்யும் எந்திரத்தை எடுத்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இயந்திரம் நடசத்திர ஓட்டலில் அவர் தங்கியுள்ள அறையிலேயே பொருத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்