27 ஆண்டுகளுக்குப்பின் ஐ.சி.சி. சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.;

Update:2025-06-14 18:44 IST

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதின. இதில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென் ஆப்பிரிக்கா வென்றது.

இந்நிலையில், 27 ஆண்டுகளுக்குப்பின் ஐ.சி.சி. சாம்பியன் பட்டத்தை தென் ஆப்பிரிக்கா தற்போது வென்றுள்ளது. கடைசியாக 1998ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை தென் ஆப்பிரிக்கா வென்றது. அதன்பின்னர், ஐ.சி.சி. கோப்பை எதையும் தென் ஆப்பிரிக்கா வெல்லவில்லை. தற்போது 27 ஆண்டுகளுக்குப்பின் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்காவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்