டி20 தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய தீப்தி ஷர்மா
இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் .;
மும்பை,
சர்வேதச டி20 கிரிக்கெட் போட்டியின் புதிய பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.இதில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதனால் தீப்தி ஷர்மா 737 புள்ளிகள் பெற்று, ஆஸ்திரேலிய வீராங்கனை அனபெல்லா சதர்லாந்தை (736 புள்ளி ) பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் வீராங்கனை சதியா இக்பால் 3வது இடத்திலும், இங்கிலாந்து வீராங்கனைகள் சோபி 4வது இடத்திலும், லாரன் பெல் 5வது இடத்திலும் உள்ளனர்.