மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக ஜெமிமா நியமனம்
புதிய கேப்டனை நியமிப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.;
புதுடெல்லி,
4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி நவி மும்பை மற்றும் வதோதராவில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது. நவி மும்பையில் நடக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டு வந்த மெக் லானிங்கை ஏலத்திற்கு முன் டெல்லி அணி விடுவித்தது. இதனால் புதிய கேப்டனை நியமிப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், இந்திய முன்னணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
CAPTAIN ROCKSTAR IS HERE TO RULE ❤️ pic.twitter.com/1fl0NWEPaj
— Delhi Capitals (@DelhiCapitals) December 23, 2025