தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஒப்பந்த பட்டியல் வெளியீடு.. அதிரடி வீரருக்கு இடமில்லை

இந்த ஒப்பந்த காலம் வரும் ஜூன் மாதம் தொடங்கி 2026 மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.;

Update:2025-04-08 16:33 IST

image courtesy: ICC

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை அறிவித்துள்ளது. 18 வீரர்கள் கொண்ட அந்த பட்டியலில் முன்னணி அதிரடி வீரரான ஹென்ரிச் கிளாசெனின் பெயர் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஹைபிரிட் ஒப்பந்தம் அடிப்படையில் டேவிட் மில்லர் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசெனை சேர்த்துள்ளது. இவர்கள் இருவரும் முக்கியமான இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. தொடர்களின்போது அணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் 18 வீரர்கள் கொண்ட ஒப்பந்த பட்டியல்:-

டெம்பா பவுமா, டேவிட் பெடிங்ஹாம், நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், க்வேனா மபாகா, எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.

ஹைபிரிட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள வீரர்கள்:

டேவிட் மில்லர் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென்

இந்த ஒப்பந்த காலம் வரும் ஜூன் மாதம் தொடங்கி 2026 மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்