சூர்யகுமார் யாதவ் சிறந்த கேப்டனாக உருவெடுப்பார் - முகமது கைப்
இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் வெற்றிக்கான ரன்னை எடுத்தார். அத்துடன் குறிப்பிட்ட விஷயங்களில் ஊடகங்களுக்கு அவர் பதிலளித்த விதம், ஒரு கேப்டனாக அவருக்கு திறமை இருப்பதை காட்டியது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதலில் தான் சூர்யகுமார் யாதவ் உண்மையான தலைவராக மாறினார். எனவே 20 ஓவர் கிரிக்கெட் கேப்டன்ஷிப்பில் ரோகித் சர்மாவுக்கு சரியான மாற்றாக அவர் இருக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
அவரது கேப்டன்ஷிப் அற்புதமாக இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு புதிய பந்தில் பவுலிங் வாய்ப்பு வழங்குகிறார். அபிஷேக் ஷர்மாவை மிடில் ஓவர்களில் ஒன்றிரண்டு ஓவர்கள் பயன்படுத்துகிறார். அனைத்து விஷயங்களையும் சரியான முறையில் கையாள்கிறார். 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது தலைமையில் இந்திய அணி 24 ஆட்டங்களில் ஆடி 19-ல் வெற்றி பெற்றுள்ளது. எனவே அவர் மிகச்சிறந்த கேப்டனாக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.