டி20 கிரிக்கெட்: மோசமான சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் இதனை நிகழ்த்தியுள்ளார்.;

Update:2025-12-11 21:52 IST

சண்டிகார்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 90 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இந்தியா இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கியுள்ளார். குறிப்பாக அவர் வீசிய ஒரு ஓவரில் (ஆட்டத்தின் 11-வது ஓவர்) 7 வைடு உட்பட 18 ரன்களை வாரி வழங்கினார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக வைடு வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். இதற்கு முன்பு கலீல் அகமது ஒரே ஓவரில் 6 வைடுகளை வீசியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்