ஓய்வு குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்

ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுப்பது கடினமானதாக இருக்காது என்று கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்;

Update:2026-01-28 13:56 IST

புதுடெல்லி,

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் ,‘யூடியூப்’ சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது ஓய்வு குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். கே.எல்.ராகுல் கூறுகையில்,

கிரிக்கெட்டை தாண்டி வாழ்க்கை இருப்பதால் ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுப்பது கடினமானதாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஓய்வு குறித்த எண்ணம் எனது மனதில் தோன்றி இருக்கிறது. நான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருந்தால் ஓய்வு பெறுவதற்கான நேரம் எது? என்பது உங்களுக்கு தெரியும். அந்த நேரம் வரும் போது ஓய்வு முடிவை எடுக்காமல் இழுத்தடிப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை.என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்