டி20 கிரிக்கெட்: ருதுராஜ் கெய்க்வாட்டின் மாபெரும் சாதனையை தகர்த்த பிரெவிஸ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பிரெவிஸ் 125 ரன்கள் அடித்தார்.;
image courtesy: twitter/@ProteasMenCSA
டார்வின்,
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி டார்வினில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 125 ரன்கள் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் மற்றும் துவார்ஷியூஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் டெவால்ட் பிரெவிஸ் 125 ரன்கள் அடித்தது டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன்னர் இந்தியாவின் ருதுராஜ் கெய்க்வாட் 123 ரன்கள் அடித்திருந்ததே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக இருந்தது. தற்போது ருதுராஜின் சாதனையை முறியடித்துள்ள பிரெவிஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.