டி20 உலகக் கோப்பை: நேபாளம் அணியின் ஜெர்சி அறிமுகம்

இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.;

Update:2026-01-06 14:29 IST


சென்னை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்காக 20 அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. மேலும் உலகக் கோப்பை தொடருக்காக புதிய ஜெர்சியையும் அணிகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சியை நேபாளம் அணி அறிமுகப்படுத்தியுள்ளது.

நேபாளம் இடம்பெற்றுள்ள 'சி' பிரிவில் , இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இத்தாலி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்