நமீபியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.;
image courtesy: ICC
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 11ம் தேதி நடக்கிறது. இதையடுத்து இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு டோனோவன் பெரீரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்: டோனோவன் பெரீரா (கேப்டன்), நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரூபின் ஹெர்மன், க்வேனா மபாகா, ரிவால்டோ மூன்சாமி, நகாபா பீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஆண்டிலே சிமெலேன், ஜேசன் ஸ்மித், லிசாட் வில்லியம்ஸ்.