இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி வெற்றி

தென்ஆப்பிரிக்க ஏ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது;

Update:2025-11-10 01:14 IST

பெங்களூரு,

இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 255 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 221 ரன்களும் எடுத்தன. 34 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 382 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 417 ரன் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணியில் களம் இறங்கிய அனைவரும் அதிரடியாக ஆடியதுடன் இரட்டை இலக்க பங்களிப்பை வழங்கி வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

தென்ஆப்பிரிக்க ஏ அணி 2-வது இன்னிங்சில் 98 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்மாக ஜோர்டான் ஹெர்மான் 91 ரன்களும், செனோக்வானோ, ஜூபைர் ஹம்சா தலா 77 ரன்களும், பவுமா 59 ரன்களும், கனோர் எஸ்டர்ஹூஜென் 52 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்க ஏ அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. முன்னதாக முதலாவது டெஸ்டில் இந்திய ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்