டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்க அணியுடன் இணைந்த இங்கிலாந்து முன்னாள் வீரர்

ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.;

Update:2025-06-02 18:11 IST

image courtesy:PTI

லண்டன்,

2023-25 சுழற்சிக்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 11-15-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.

ஏனெனில் அந்த அணியில் வேகப்பந்துவீச்சு துறை தென் ஆப்பிரிக்காவை விட வலுவானதாக உள்ளது. இருப்பினும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா சவால் விடுத்துள்ளார்.இந்த போட்டிக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் குழுவில் இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இணைந்துள்ளார். அவர் தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 604 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள பிராட், அதில் 153 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் இங்கிலாந்து சூழ்நிலை அவருக்கு நன்கு தெரியும் என்பதால் அவரது அனுபவம் தென் ஆப்பிரிக்க அணிக்கு நிச்சயம் வலுவானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Tags:    

மேலும் செய்திகள்