தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக்: சதர்ன் பிரேவ் அணியை வீழ்த்திய லண்டன் ஸ்பிரிட்

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் தொடர் (100 பந்துகள்) இங்கிலாந்தில் நடந்து வருகிறது.;

Update:2025-08-24 07:48 IST

Image Courtesy: @thehundred

லண்டன்,

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் தொடர் (100 பந்துகள்) இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - சதர்ன் பிரேவ் அணிகள் மோதின. இந்த மோதலில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட் அணி 100 பந்துகளில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் குவித்தது.

லண்டன் ஸ்பிரிட் தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 53 ரன் எடுத்தார். தொடர்ந்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சதர்ன் பிரேவ் அணி 92 பந்துகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 139 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 47 ரன் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட் அணி அபார வெற்றி பெற்றது. லண்டன் ஸ்பிரிட் தரப்பில் ரிச்சர்ட் க்ளீசன், லியாம் டாவ்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்