தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக்: லண்டன் ஸ்பிரிட் அணியை வீழ்த்திய ஓவல் இன்விசிபிள்ஸ்
ஓவல் இன்விசிபிள்ஸ் தரப்பில் அதிகபட்சமாக் வில் ஜேக்ஸ் 24 ரன் எடுத்தார்.;
Image Courtesy: @thehundred
லண்டன்,
இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான லண்டன் ஸ்பிரிட் அணியும், ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட் அணி அணி 94 பந்துகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 80 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. லண்டன் ஸ்பிரிட் அணி தரப்பில் அதிகபட்சமாக ஆஷ்டன் டர்னர் 21 ரன் எடுத்தார். ஓவல் இன்விசிபிள்ஸ் தரப்பில் சாம் கர்ரன், ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 81 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஓவல் இன்விசிபிள்ஸ் அணி 69 பந்துகளில் 4 விக்கெட்டை இழந்து 81 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஓவல் இன்விசிபிள்ஸ் தரப்பில் அதிகபட்சமாக் வில் ஜேக்ஸ் 24 ரன் எடுத்தார்.