முகமது சிராஜை வாங்க முடியாமல் போக இதுவே காரணம் - விளக்கம் அளித்த ஆர்.சி.பி

2025 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் முகமது சிராஜை ஆர்.சி.பி அணி வாங்க தவறியது.;

Update:2025-08-23 11:53 IST

கோப்புப்படம்

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஆர்.சி.பி அணிக்காக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்தார். இந்திய அணிக்கு முகமது சிராஜ் தேர்வாக ஆர்.சி.பி அணியின் பங்களிப்பு அளப்பரியது.

தனது கரியரின் ஆரம்பத்தில் தடுமாற்றத்தை சந்தித்த அவருக்கு ஆர்.சி.பி அணியில் கிடைத்த வாய்ப்பின் மூலமே அனைத்தும் நல்ல வழியில் சென்றது. முகமது சிராஜ் ஆர்.சி.பி அணியுடன் இணைந்து தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும், அந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று முழுமூச்சுடன் விளையாடி வந்தார்.

ஆனால், 2025 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் அவரை ஆர்.சி.பி அணி வாங்க தவறியது. பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 12 கோடியே 25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர் குஜராத் அணிக்காக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் ஆர்.சி.பி அணி முகமது சிராஜை ஏலத்தில் எடுக்காதது ஏன்? என்பது குறித்த தகவலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வெளியான ஆர்.சி.பி நிர்வாகம் தரப்பில் வெளியான தகவலின் படி, நாங்கள் முகமது சிராஜை வாங்க வேண்டும் என்று முழு மனதுடன் இருந்தோம். ஆனால் ஏலத்தில் அவருடைய தொகை அதிகரித்துக் கொண்டே சென்றதும் ஒரு கட்டத்தில் நாங்கள் அவருக்கு இணையான மற்றொரு பந்துவீச்சாளர் வாங்க முடியாது என்று நினைத்தோம்.

அதனாலேயே, முகமது சிராஜை வாங்க முடியாமல் போனது. அதேபோன்று இம்முறை புவனேஸ்வர் குமாரை வாங்க வேண்டும் என்ற திட்டமும் எங்களிடம் இருந்ததால் 10 கோடியே 25 லட்சம் ரூபாய் வரை சென்று நாங்கள் அவரை வாங்கினோம். அதன் காரணமாகவே முகமது சிராஜை வாங்க முடியாமல் தவற விட்டோம். இவ்வாறு தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்