முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு

நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய 3 அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நாளை தொடங்குகிறது.;

Update:2025-07-13 12:33 IST

வெல்லிங்டன்,

நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய 3 அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடர் ஜிம்பாப்வேயில் நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் காயம் காரணமாக சில வீரர்கள் விலகியதாலும், சில வீரர்கள் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடி வருவதாலும் முத்தரப்பு டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் மேலும் 4 வீரர்களை சேர்த்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி டெவான் கான்வே, மிட்செல் ஹே, ஜிம்மி நீஷம், டிம் ராபின்சன் ஆகியோர் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்