மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற உ.பி. பந்து வீச்சு தேர்வு
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.;
மும்பை,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் நவி மும்பையில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற உத்தரபிரதேச வாரியர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, மும்பை அணி களமிறங்கி பேட்டிங் ஆட உள்ளது. ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.