ஒருநாள் கிரிக்கெட்டில் 54வது சதம் விளாசிய விராட் கோலி
338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா விளையாடி வருகிறது.;
இந்தூர்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 5 டி20 கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. இதையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா விளையாடி வருகிறது.
இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 91 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 54வது சதத்தை விளாசியுள்ளார்.
இந்த சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 85வது சதத்தை விளாசியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி விளாசிய 7வது சதம் இதுவாகும்.
தற்போதைய நிலவரப்படி இந்தியா 41.3 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியா வெற்றிபெற 51 பந்துகளில் 93 ரன்கள் தேவை. கோலி 103 ரன்களிலும், ஹர்ஷித் ரானா 33 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.