மகளிர் உலகக்கோப்பையை வென்ற கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஹர்மன்பிரீத் கவுருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.;

Update:2025-11-13 12:58 IST

சென்னை,

13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை உச்சி முகர்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி தீர்த்தனர். அத்துடன் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நடிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

Advertising
Advertising

அந்த வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அத்துடன் பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து அவர் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் மாணவிகள் இந்திய வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து வந்து ஹர்மன்பிரீத் கவுரிடம் கோப்பையை பெற்றுக்கொண்டனர். அதாவது மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியினர் கோப்பையை வென்று கொண்டாடியதை போன்று அவர்கள் நடித்து காட்டினர். 

 

Tags:    

மேலும் செய்திகள்