உலக துப்பாக்கிச் சுடுதல்: வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்
இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.;
கெய்ரோ,
உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 28 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
அரியானாவைச் சேர்ந்த 23 வயதான பன்வாலாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். பிரான்சின் கிளெமென்ட் தங்கப்பதக்கம் (31 புள்ளி) வென்றார்.