இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸி.பேட்டிங் தேர்வு
இந்தியா - ஆஸ்திரேலியா இளையோர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது.;
பிரிஸ்பேன்,
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
இந்தியா: வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, ராகுல் குமார், அபிக்யான் குண்டு, ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சவுகான், நமன் புஷ்பக், ஹெனில் படேல், கிஷன் குமார்
ஆஸ்திரேலியா: சைமன் பட்ஜ், அலெக்ஸ் டர்னர், ஸ்டீவன் ஹோகன், வில் மலாஜ்சுக் (கேப்டன்), யாஷ் தேஷ்முக், டாம் ஹோகன், ஆர்யன் சர்மா, ஜான் ஜேம்ஸ், ஹேடன் ஷில்லர், பென் கார்டன், சார்லஸ் லாச்மண்ட்