முதல் வீரராக மெஸ்சி வரலாற்று சாதனை

மெஸ்சி இண்டர் மியாமி கிளப்புக்காக விளையாடி வருகிறார்.;

Update:2025-12-12 18:15 IST

நியூயார்க்,

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி அமெரிக்காவில் உள்ள இண்டர் மியாமி கிளப்புக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனுக்கான மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.) போட்டியில் இண்டர் மியாமி கிளப் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. வெற்றியில் முக்கிய பங்காற்றிய மெஸ்சி இந்த சீசனில் மொத்தம் 43 கோல் அடித்ததுடன், 26 கோல் அடிக்க உதவிபுரிந்தார்.

இந்த நிலையில் மேஜர் லீக் கால்பந்து தொடரின் மதிப்பு மிக்க வீரர் விருது தொடர்ந்து 2-வது ஆண்டாக மெஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விருதை தொடர்ச்சியாக இரு முறை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை மெஸ்சி படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்