புரோ ஆக்கி லீக்: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியா தரப்பில் மந்தீப் சிங் மற்றும் தில்ப்ரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.;

Update:2025-02-17 14:39 IST

image courtesy:twitter/@TheHockeyIndia

புவனேஸ்வர்,

6-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.

பிற்பாதியில் இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மந்தீப் சிங் மற்றும் தில்ப்ரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்