மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-ஜப்பான் ஆட்டம் டிரா

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிங்கப்பூர் உடன் மோதுகிறது.;

Update:2025-09-07 15:55 IST

image courtesy:twitter/@TheHockeyIndia

ஹாங்சோவ்,

11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இருந்தது. இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் உடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜப்பான் அணியில் ஹிரோகா முரயமா மற்றும் புஜிபயாஷி ஆகியோர் தலா ஒரு கோலும், இந்திய அணியில் ருதுஜா மற்றும் நவ்னீத் கவுர் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்