மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியாவை வீழ்த்தி சீனா சாம்பியன்

3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.;

Update:2025-09-15 06:50 IST

image courtesy:twitter/@TheHockeyIndia

ஹாங்சோவ்,

11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்4 சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்களான சீனா (3 வெற்றி) முதலிடமும், இந்தியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் சீனா 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடைபோட்ட சீன அணி ஆசிய கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும்.

அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மாதம் பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிக்கும் சீனா நேரடியாக தகுதி பெற்றது.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்